📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 28, 2026 01:03 PM

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்யக்கோரி விருதுநகரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்யக்கோரி விருதுநகரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, எஸ்ஐஆர் என்ற பெயரில் நியாயமான ஜனநாயக முறைகளை மீறி வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கியது மற்றும் தரவுகளில் மாற்றம் செய்வது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்திட வேண்டும், தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர வேண்டும்.

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களையும் உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலக்குவதோடு, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.