📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 07:00 PM

தமிழ் தொழில்நுட்பங்களை உருவாக்க நிதியுதவி

தமிழ் தொழில்நுட்பங்களை உருவாக்க நிதியுதவி

சென்னை: தமிழ் மொழியின் பயன்பாட்டை, 'ஆன்லைனில்' மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு நிதியுதவி வழங்க உள்ளது.அதன்படி, தமிழ் மொழி வளர்ச்சிக்கான மொழி சார்ந்த தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு, 2.50 கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்பட உள்ளது.தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்ய, தமிழக அரசின் 'ஸ்டார்ட் அப்' நிறுவனமும், தமிழ் இணைய கல்வி கழகமும் அழைப்பு விடுத்துள்ளன.இதற்கு, form.startuptn.in/LTF தளத்தில் விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.