Tamil Nadu
August 13, 2026 05:00 PM
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
19 மாவட்டங்களில் மழை
இந்த நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம், அரியலூர், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவு, திருவாறு, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu