📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 27, 2026 10:04 PM

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : 30% மாவட்ட செயலாளர் பதவி கேட்கும் கனிமொழி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : 30% மாவட்ட செயலாளர் பதவி கேட்கும் கனிமொழி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : 30% மாவட்ட செயலாளர் பதவி கேட்கும் கனிமொழி..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சி மறுசீரமைப்பு ஆலோசனைகளின் போது, இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் பரிந்துரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகக் கட்சிக்குள் ஒருதரப்பினர் கருதுகின்றனர். இளைஞரணி நிர்வாகிகளுக்கு 15-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர் பதவிகளை ஒதுக்க வேண்டும் என்றும், மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் உதயநிதி தரப்பு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கனிமொழியின் 30% கோரிக்கை உட்கட்சி சமநிலையை உரசிப் பார்த்துள்ளது.

அதாவது, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் குறைந்தபட்சம் 30 சதவீதப் பங்கீட்டைத் தனது ஆதரவாளர்களுக்கும், மகளிர் அணி மற்றும் தென்மண்டல நிர்வாகிகளுக்கும் ஒதுக்க வேண்டும் என அவர் தலைமைக்குக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் முதன்மைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, கட்சியின் குடும்ப மூத்த தலைவர்களையும் இளைஞரணி வளர்ச்சியையும் சமமாக அரவணைத்துச் செல்வதில் பெரும் சவால் உருவாகியுள்ளது. கனிமொழியின் ஆதரவாளர்களுக்குப் போதிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் அது தென் மாவட்டங்களில் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும் என்பதால், இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கட்சியில் 70 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகளுக்கு மண்டலப் பொறுப்புகளை வழங்கிவிட்டு, புதியவர்களுக்கும் மகளிர்க்கும் மாவட்ட அளவில் வாய்ப்பளிப்பதே உகந்தது எனப் பல தரப்பிலிருந்தும் ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், மாவட்டச் செயலாளர் பதவி நியமனத்தில் வெடித்துள்ள இந்த உள்விவகாரப் போட்டி, வரவிருக்கும் பொதுக்குழு மற்றும் கட்சி சீரமைப்புக் கூட்டங்களில் எத்தகைய முடிவை எட்டும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.