📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 12, 2026 05:00 PM

தமிழ்நாட்டுக்குத் தினமும் 12,000 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்குத் தினமும் 12,000 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு

புதுடெல்லி: காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தினமும் 12,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு இனி வரும் 15 நாள்களுக்கு தினமும் 3,500 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை ஏற்று கர்நாடகா நீரைத் திறந்துவிடவில்லை.

இத்தகைய சூழ்​நிலை​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்​தின் 140வது கூட்​டம் டெல்​லி​யில் அதன் தலை​வர் வினீத் குப்தா தலை​மை​யில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) மாலை நடை​பெற்​றது.

அந்தக் கூட்டத்தில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளா, புதுச்​சேரி மாநிலங்​களைச் சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதி​காரி​கள் பங்​கேற்​ற​னர்.

தமிழக அரசின் தரப்​பில் கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பின்​படி கர்​நாடக அரசு காவிரி​யில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்​களில் தமி​ழ​கத்​துக்கு வழங்க வேண்​டிய நீரை மாத​வாரி​யாக வழங்​க​வில்​லை என முறையிட்டனர்.

அதற்கு கர்​நாடக அரசுத் தரப்​பில், “கர்​நாட​கா​வில் தென்​மேற்குப் பருவ மழை போதுமான அளவு பெய்யாததால், கிருஷ்ண​ராஜ சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அணை​களுக்கு போதிய நீர் வரவில்​லை. இந்நிலை​யில் தமி​ழ​கத்​துக்கு பாக்கி வைத்துள்ள நீரை முழு​வது​மாகத் திறக்க இயலாது,” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுத் தலை​வர், “உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வின்​படி தமி​ழ​கத்​துக்​குக் காவிரி நீரைத் திறந்​து​விட கர்​நாடகா முன்வர வேண்​டும். தமி​ழ​கத்​துக்கு அடுத்த 15 நாள்களுக்கு தின​மும் 12,000 கன அடி நீரைத் திறந்​து​விட வேண்​டும்,” என்று பரிந்துரைத்தார்.

அதன் பிறகு நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அப்போது, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.