📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 12, 2026 05:03 PM

FCRA மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றம்

FCRA மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றம்

FCRA மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி: FCRA மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றபட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

பெரும் எதிர்பார்ப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியிருந்த FCRA மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த மசோதா இந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. இது தொடர்பான தீர்மானத்தை ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் மக்களவையில் முன்மொழிய, அது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டுக்குழுவைப் பொறுத்தவரை, மக்களவையைச் அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒன்றிய அரசு மீண்டும் இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாளில் கூட்டுக்குழு தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளபட்டபோது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய கே. வேணுகோபால் நீங்கள் இந்த மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பக்கூடாது மாறாக நீங்கள் அதனை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

ஏனெனில், இந்த மசோதா தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதற்கான வழியை ஏற்படுத்தியிருக்கிறது எனக் கூறி, இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். அதற்குப் பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதா எந்தவொரு சிறுபான்மைச் சமூகத்தினரையும் குறிவைத்துக் கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகளுடைய கோரிக்கையை ஏற்றுத்தான் இது நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது; எனவே, அவர்களுடைய கோரிக்கை நிறைவேறியிருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்ற கருத்தையும் அவர் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து இந்த மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த மசோதா இந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படாது என்பது உறுதியாகியிருக்கிறது. தமிழகச் சட்டப்பேரவையில் கூட, இந்த எதிர்ப்பு கிளப்பிய மசோதாவுக்கு எதிராக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.