தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும்
சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்.
ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.
இந்து, இந்தி, இந்து ராஷ்டிரியம் என்ற போக்கை எதிர்க்கும் விதமான இந்த தீர்மானத்திற்கு விசிக தரப்பில் ஆதரவு.
தீர்மானம் குறித்து முதலமைச்சர் பேசியபோது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமே அதிகமாக கைதட்டி வரவேற்றனர்.
தனித்தீர்மானம் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து என்பதால் எதிர்க்கட்சி தரப்புமே கைதட்டி வரவேற்கலாமே..
தமிழ்தேசியமும், திராவிடமும் ஒன்றென சொல்லும் அபாய சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் சிறப்புக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.