📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 10, 2026 01:33 AM

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி: இன்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்தது!

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி: இன்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்தது!

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி: இன்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்தது!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உலக அளவில் அதிகப்படியான தங்கம் பயன்படுத்துகிற, கையிருப்பு வைத்திருக்கிற நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

அதிலும், இந்திய குடும்பங்கள் சுமார் 34,600 டன் தங்கத்தை வைத்திருக்கின்றன. இது உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 89 சதவீதத்திற்கு சமமானது என ஆன்டிக் பங்கு வர்த்தக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், உலகளாவிய தங்கத் தேவையில் இந்தியா சுமார் 26 சதவீத பங்களிப்பை கொண்டிருப்பதாகவும், அதிலும் ஆபரண தங்கமே அதிகளவில் வாங்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் தங்கத்தின் பயன்பாடு மற்றும் தேவை அதிகமாக இருந்தாலும், அமெரிக்க பொருளாதார கொள்கை மாற்றங்கள், டாலர் மதிப்பு மாற்றம் போன்றவையே தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.

நேற்று தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 7) ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.140 அதிகரித்து ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,120 அதிகரித்து ரூ.1,14,160-க்கும் விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 9) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,000 குறைந்து, ரூ.1,13,160-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கடந்த 5 நாட்களாகவே மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையாகி வருகிறது.