தங்கம் விலை அதிரடி குறைவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 சரிவு..!
தங்கம் விலை அதிரடி குறைவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 சரிவு..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 1) காலை உயர்வுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, மாலை நேரத்தில் சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும், ஒரு கிராம் ரூ.14,175-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலை நிலவரத்துடன் ஒப்பிடும்போது, ஒரு சவரனுக்கு ரூ.1,680-ம், ஒரு கிராமுக்கு ரூ.210-ம் விலை குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், ஒரே நாளில் மாலை நேரத்தில் ஏற்பட்ட இந்தக் கணிசமான சரிவு நகை வாங்குவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே, வெள்ளியின் விலையும் இன்று மாலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய மாலை நிலவரம்:
1 சவரன் தங்கம்: ரூ.1,13,4001 கிராம் தங்கம்: ரூ.14,1751 கிராம் வெள்ளி: ரூ.2501 கிலோ வெள்ளி: ரூ.2,50,000