Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
Thoothukudi district Holiday : ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை, ஆகஸ்ட் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 14 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை கொண்டாட்டம்
விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான் அந்த வகையில், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியூர்களுக்கோ சுற்றுலா செல்வார்கள். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாக உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் விடுமுறை உள்ள நிலையில், நாளைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,.
தூத்துக்குடி உள்ளூர் விடுமுறை
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தூத்துக்குடி மாவட்டம். கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தூய பரலோக மாதா பேராலயத்திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 15-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும், இத்திருவிழாவிற்கு தமிழகமெங்கிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பயணிகளாக வருகை தந்து சிறப்பிப்பதாகவும், 9-ஆம் நாள் திருவிழா (14.08.2026) உச்சகட்டமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி அன்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்க அரசின் அனுமதியைக் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார்.
தூய பரலோக மாதா பேராலயத் திருவிழா
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தப்படுகிறார்.மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act. 1881)-என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு அம்மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி