மயிலு முதல் விஜி வரை... ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தும் முத்தாய்ப்பான தமிழ் திரைப்படங்கள்
மயிலு முதல் விஜி வரை... ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தும் முத்தாய்ப்பான தமிழ் திரைப்படங்கள்
கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான காதல் கலந்த திரில்லர் படம் இதுவாகும். தனது 13 வயதில் ஸ்ரீதேவி நாயகியாக ரஜினி மற்றும் கமல் உடன் இணைந்து நடித்தார். செல்வி என்ற வேடத்தில் முதல் படத்திலேயே அவர் துணிந்து நடித்த அழுத்தமான கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று.16 வயதினிலே (1977)
பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல் கூட்டணியில் வெளியான இப்படத்தில் மீண்டும் அவர்களுடன் இணைந்து நடித்தார் ஸ்ரீதேவி. மயிலு என்ற வேடத்தில் கிராமத்து பெண்ணாக இயல்பான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். செந்தூரப் பூவே... பாடலில் அவர் வரும் காட்சிகள் என்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.சிகப்பு ரோஜாக்கள் (1978)
கிராமத்து கதைகள் தான் பாராதிராஜா ஸ்டைல் என்ற பிம்பத்தை உடைத்த படம் இது. உளவியல் திரில்லர் கதையில் வெளியான இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்தனர். துணிக்கடையில் வேலை செய்யும் ஒரு நடுத்தர வர்க்கத்து சாரதா என்ற பெண்ணாக பின்னர் சைக்கோ கணவனின் கொடூர முகத்தை எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக ஸ்ரீதேவி நடிப்பில் மிரட்டி இருப்பார்.ப்ரியா (1978)
சுஜாதாவின் நாவலைத் தழுவி எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி உடன் நடித்து வெளியான படம் இது. கிராமத்து பெண் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி பின்னர் தயாரிப்பாளரின் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் ப்ரியா என்ற பெண்ணின் வலியை சொன்ன படம். சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது படம். இளையராஜாவின் 50வது படம். தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஸ்டீரியோபோனிக் ஒலியில் படமாக்கப்பட்ட படம் என இந்த படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. ஸ்ரீதேவி இதில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்தாலும் எங்கும் ஆபாசமாகவோ அல்லது விரசமாகவோ இருக்காது அளவுக்கு நடித்திருப்பார்.வணக்கத்துக்குரிய காதலியே (1980)
ஏ. சி. திருலோகச்சந்தரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஸ்ரீதேவி பின்னாளில் அவரது இயக்கத்தில் நாயகியாகவும் நடித்தார். அப்படி அவர் நடித்த படம் தான் இது. ரஜினிகாந்த், விஜயகுமார் உடன் ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடித்தார். தமிழ் சினிமாவின் விசித்திரமான மர்மத் திரைப்படமாகும். கதைப்படி கிராமத்து பெண் சாந்திக்கு(ஸ்ரீதேவி) ஏற்படும் ஒரு விபத்திற்குப் பின், அவளுக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் அதிமானுட சக்தி கிடைக்கிறது. இந்தத் தனித்துவமான மனநிலையை, பயமும் பதற்றமும் கலந்த முகபாவனைகளுடன் ஸ்ரீதேவி மிகச் சிறப்பாகக் கையாண்டிருப்பார்.விஸ்வரூபம் (1980)
சிவாஜி கணேசனின் பாபு, வசந்த மாளிகை போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி பின்னாளில் கவரிமான் படத்தில் அவரது மகளாக நடித்தார். அதன்பின் அவருடன் விஸ்வரூம் என்ற படத்தில் அவருடன் நாயகியாகவும் நடித்தார். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிவாஜி இரண்டு வேடங்களில் நடித்தார். ஒரு சிவாஜிக்கு சுஜாதாவும், இன்னொரு சிவாஜிக்கு ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்தனர். குடும்பப் பாசப் போராட்டக் காவியமாகும்.ஜானி (1980)
மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து படம் ‛ஜானி". அர்ச்சனா என்ற பாடகியாக ஸ்ரீதேவி நடிப்பில் அசத்திய படம். ஸ்ரீதேவியின் கிளாஸான படங்களில் இதுவும் ஒன்று. தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த காதல் மற்றும் குற்றவியல் திரில்லர் காவியமாகும்.குரு (1980)
ஐவி சசி இயக்கத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் 1980ல் வெளியான படம் இது. ராபின்ஹூட் மாதிரியான படம் இது. பகலில் நல்லவராகவும், இரவில் கொள்ளையடிப்பவராகவும் கமல் நடித்தார். குற்றப்பின்னணியில் வெளியான ஆக் ஷன், திரில்லர் படம். கமல் மற்றும் ஸ்ரீதேவியின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று.வறுமையின் நிறம் சிவப்பு (1980)
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் இது. வேலை வாய்ப்பின்மையை சொன்ன அழுத்தமாக சொன்ன படம் இது. வறுமையின் காரணமாக குடும்பத்தைக் காப்பாற்ற நாடகங்களில் நடிக்கும் மற்றும் தட்டச்சு வேலை செய்யும் ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் பொறுப்பை ஸ்ரீதேவி கச்சிதமாகப் பிரதிபலித்திருப்பார்.மீண்டும் கோகிலா (1981)
ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் 1981ல் வெளியான படம் இது. கணவன் மனைக்கு இடையேயான ஈகோ மோதலைச் சொன்ன நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். ஆரம்பத்தில் பிராமணக் குடும்பத்துப் பெண்ணாக கோகிலாவாக வரும் ஸ்ரீதேவி, தனது கணவனை ஒரு நடிகையிடமிருந்து மீட்க மேற்கொள்ளும் தந்திரங்கள் தான் படத்தின் கதை.வாழ்வே மாயம் (1982)
ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான பட்ம இது. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காதல் காவியங்களில் இதுவும் ஒன்று. புற்றுநோய் பாதிக்கப்பட்ட கமல், தன்னை வெறுப்பது போல் நடிக்கும் பாத்திரம். காதலன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்று நினைத்து ஏங்கும் இடங்களிலும், பின்னர் உண்மை தெரிந்து உருகும் இடங்களிலும் ஸ்ரீதேவியின் நடிப்பு அசாத்தியமானது. கிளைமாக்ஸில் கமலை ஸ்ரீதேவி சந்திக்கும் காட்சி உருக்கமானது.மூன்றாம் பிறை (1982)
பாலு மகேந்திரா இயக்கத்தில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் 1982ல் வெளியான படம் இது. கமல்-ஸ்ரீதேவி கூட்டணியில் ஆல்டைம் பெஸ்ட் என்று சொல்லும் படங்களில் ஒன்று. ஒரு விபத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டு குழந்தையின் மனநிலைக்கு செல்லும் பாத்திரத்தில் விஜி எனும் வேடத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவரது நடை, உடை, பாவனை மற்றும் பேச்சு என அனைத்தும் குழந்தையை போலவே எதார்த்தமாக அமைந்திருந்தது. கிளைமாக்ஸ் ரயில்வே ஸ்டேஷன் காட்சியில் ஸ்ரீதேவிக்கு தன்னை ஞாபகப்படுத்த கமல் செய்யும் அந்த நடிப்பு உலகத்தரம் வாய்ந்தது. இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதேசமயம் இந்த படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது துரதிர்ஷ்டமே...