📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 03, 2026 08:00 PM

துவாஸ் சோதனைச்சாவடி அருகே விபத்து: மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு

துவாஸ் சோதனைச்சாவடி அருகே விபத்து: மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் சனிக்கிழமை (அக்டோபர் 3) பிற்பகலில் நிகழ்ந்த விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார்சைக்கிளும் இரண்டு கார்களும் சம்பந்தப்பட்ட அந்த விபத்து பற்றி பிற்பகல் 3.35 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அந்த விபத்தில் 40 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அந்த விபத்து தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையம், பிற்பகல் 310 மணியளவில் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.

துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் துவாஸ் வெஸ்ட் ரோட்டுக்கு அப்பால் விபத்து நிகழ்ந்திருப்பதால் வாகன ஓட்டுநர்கள் சாலையின் முதல் மற்றும் இரண்டாம் தடங்களைத் தவிர்க்குமாறு அந்தப் பதிவில் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

விபத்து தொடர்பான படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டன. துவாஸ் சோதனைச் சாவடி அருகே உள்ள சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாய்ந்து கிடந்தது. அதன் முன்னால் நின்றிருந்த கறுப்பு நிற காரின் பின்புறம் சேதமடைந்திருந்ததைக் காணொளி காட்டியது.

அந்த விபத்து பற்றி காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்த வாரத்தில் போக்குவரத்து தொடர்பாக நிகழ்ந்திருக்கும் மூன்றாவது மரணம் இது.