📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 27, 2026 11:03 AM

டி20 ராஜா நான்தான்.. உலகிலேயே அதிக ரன் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனை செய்த பொல்லார்ட்

டி20 ராஜா நான்தான்.. உலகிலேயே அதிக ரன் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனை செய்த பொல்லார்ட்

டி20 ராஜா நான்தான்.. உலகிலேயே அதிக ரன் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனை செய்த பொல்லார்ட்

செயின்ட் லூசியா: 2026 கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட், ஜோஸ் பட்லரின் சாதனையை முறியடித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை மீண்டும் படைத்துள்ளார்.

செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான 2026 சிபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு பொல்லார்ட் இந்த சாதனையைப் படைக்க 35 ரன்கள் தேவைப்பட்டது. தாரூபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 212 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடியது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்.

அப்போது 6 வது வீரராகக் களம் இறங்கிய பொல்லார்ட், வெறும் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்து அசத்தினார். 250 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவரது இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், ஜோஸ் பட்லரின் 14,890 ரன்கள் சாதனையை முந்தி 14,921 ரன்களுடன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பொல்லார்ட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிறிஸ் கெய்லின் 14,562 ரன்கள் சாதனையை பொல்லார்ட் முறியடித்திருந்தார். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடிய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்தார். தற்போது பொல்லார்ட் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்க இன்னும் 79 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

இப்போட்டியில் அவர் அடித்த 5 சிக்சர்கள் மூலம், டி20 கிரிக்கெட்டில் அவரது ஒட்டுமொத்த சிக்சர்களின் எண்ணிக்கை 1,010 ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ் கெய்ல் (1,056 சிக்சர்கள்) மற்றும் பொல்லார்ட் ஆகிய இருவர் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் 1000 க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.