📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 17, 2026 06:05 PM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.8.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.8.2026

வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

புதிய பாதை புலப்படும் நாள். கொள்கைப்பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் நன்மை உண்டு.

நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும்.

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும்.

விருச்சிகம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்ள நேரிடும்.

நிழல்போலத் தொடர்ந்த கடன் சுமை குறையும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு.

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மருத்துவச்செலவு உண்டு. உத்தியோகத்தில் பிறருக்கு பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

யோகமான நாள். பழைய கடன்களை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உறவினர்களால் உதவி உண்டு.