📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 08, 2026 11:33 PM

Toxic: டாக்ஸிக் புரமோஷனில் நயன்தாரா.. கியாரா அத்வானியை பார்த்ததும் என்ன பண்ணாரு பாருங்க!

Toxic: டாக்ஸிக் புரமோஷனில் நயன்தாரா.. கியாரா அத்வானியை பார்த்ததும் என்ன பண்ணாரு பாருங்க!

பெங்களூர்: யஷ் டபுள் ஆக்‌ஷனில் அப்பா - மகனாக நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. டாக்ஸிக் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவராஜ்குமார் பங்கேற்றார். நடிகைகள் நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிலையில், இருவரும் சந்தித்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாகவே ஒரு படத்தில் மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்தால் கூட எந்தவொரு பிரச்னையும் வராது. ஆனால், 2 ஹீரோயின்கள் நடித்தால் அவர்களை ஒன்றாக ஒரே விழாவில் பார்ப்பது கூட அரிதான விஷயம் தான்.

ஆனால், டாக்ஸிக் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா என ஏகப்பட்ட முன்னணி நடிகைகளை வைத்து கீது மோகன் தாஸ் பக்காவாக வேலை வாங்கியுள்ளார். மேலும், அந்த நடிகைகளும் நட்பாக பழகுவதை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

புரமோஷனுக்கு வந்த நயன்தாரா: சினிமா விழாக்களையும் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளையும் அதிகளவில் தவிர்த்து வந்த நயன்தாரா இந்த ஆண்டு வேறு ஒரு நபராக முற்றிலுமாக மாறியுள்ளார். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து கணவரை சந்தோஷப்படுத்திய நயன்தாரா தற்போது பெங்களூரில் நடைபெற்ற டாக்ஸிக் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பக்காவான ரோல்: கன்னட படத்தில் நயன்தாராவுக்கு சாதாரண ரோல் எல்லாம் கிடையாது. செம பக்காவான ரோல் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. இந்த மொத்த சிட்டியையும் நீதான் ஆளணும் ராயா என யஷ்ஷிடம் நயன்தாரா பேசுவதில் இருந்து டிரைலர் செம ஃபயராக உள்ளது. மெயின் வில்லியாக நயன்தாரா மாறுவாரா? என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கிறது.

கியாரா அத்வானியை கட்டிப்பிடித்து: டாக்ஸிக் படத்தில் ராயா கதாபாத்திரத்தில் நடித்த யஷ்ஷுக்கு ஜோடியாகவே கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்நிலையில், டாக்ஸிக் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த நயன்தாரா சிவராஜ்குமாரிடம் பேசும் காட்சிகள் வெளியாகின. மேலும், அடுத்து கியாரா அத்வானி என்ட்ரி கொடுத்ததும் அமைதியாக அமர்ந்திருக்காமல், அவரை ஓடிச் சென்று வரவேற்று கட்டியணைத்து அன்பை பொழிந்த காட்சிகள் தீயாய் பரவி வருகின்றன. டாக்ஸிக் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகிறது. நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் திரைப்படம் ஆகஸ்ட் 28ம் தேதி திரைக்கு வருகிறது.