📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 15, 2026 04:03 AM

“Two days. Two hundred stalls. One legacy.”

“Two days. Two hundred stalls. One legacy.”

“Two days. Two hundred stalls. One legacy.” - செட்டிநாடு பிசினஸ் எக்ஸ்போ 3.0

செட்டிநாட்டின் பாரம்பரியம், வணிகத்தின் புதிய வளர்ச்சியாக 200-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் 3.0 நாளை தொடங்குகிறது.

நாகரத்தார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Chettinaadu Business Expo 3.0” பிரம்மாண்ட வர்த்தகக் கண்காட்சி நாளை (ஆகஸ்ட் 15) மற்றும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. செட்டிநாட்டு பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் வகையில், Jewellery, Cuisine, Fashion, Handicrafts, Lifestyle மற்றும் Business உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த உள்ளன.

தொழில்முனைவோர், வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் சந்தித்து புதிய தொடர்புகளையும் வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும் இந்தக் கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுரேஷ் சம்பந்தம் மற்றும் VS மருத்துவமனைகளின் தலைவரும், புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் பேராசிரியர் எஸ். சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.