📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 16, 2026 12:03 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வங்கதேசம் போக வாய்ப்பு.. அடியோடு மாறிய புள்ளிப்பட்டியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வங்கதேசம் போக வாய்ப்பு.. அடியோடு மாறிய புள்ளிப்பட்டியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வங்கதேசம் போக வாய்ப்பு.. அடியோடு மாறிய புள்ளிப்பட்டியல்

டார்வின்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி பெற்ற டெஸ்ட் வெற்றி, 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. டார்வினில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வங்கதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், புள்ளிகள் பட்டியலில் தனது இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதனால் பல அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று வெற்றியின் மூலம் வங்கதேச அணியின் வெற்றி சதவீதம் 58.33 சதவீதத்தில் இருந்து 66.67 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 40 புள்ளிகளைப் பெற்றுள்ள வங்கதேச அணி, பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது. அதே நேரத்தில், சொந்த மண்ணில் அதிர்ச்சி தோல்வியடைந்த போதிலும் ஆஸ்திரேலிய அணி 77.77 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. எனினும், இந்த தோல்வியால் ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 87.50 சதவீதத்தில் இருந்து 77.77 சதவீதமாகக் குறைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீதத்துடன் 3வது இடத்திலும் நீடிக்கின்றன.

இந்திய அணி தற்போது 9 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது. தற்போது இலங்கைக்கு எதிராக காலே மைதானத்தில் விளையாடி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அதன் வெற்றி சதவீதம் 53.33 ஆக உயரும். எனினும் இந்தியாவால் 5வது இடத்தை தாண்ட முடியாது. ஒருவேளை இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால், அது இந்தியாவின் 5வது இடத்தை பறித்து 6வது இடத்திற்கு தள்ளிவிடும். அப்போது இலங்கை 53.33 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறும்.

ஒருவேளை காலே டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால் இந்தியாவின் வெற்றி சதவீதம் 46.66 ஆகவும், இலங்கையின் சதவீதம் 40.00 ஆகவும் குறையும். இதனால் புள்ளிகள் பட்டியலில் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்காது. வங்கதேச அணிக்கு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் உள்ளன. அவற்றில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது.