📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 18, 2026 02:03 PM

IND vs SL: ரிஷப் பண்ட் அடித்த இமாலய சிக்சர்.. மைதானத்தை தாண்டி தெருவில் விழுந்த பந்து

IND vs SL: ரிஷப் பண்ட் அடித்த இமாலய சிக்சர்.. மைதானத்தை தாண்டி தெருவில் விழுந்த பந்து

IND vs SL: ரிஷப் பண்ட் அடித்த இமாலய சிக்சர்.. மைதானத்தை தாண்டி தெருவில் விழுந்த பந்து

காலே: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அடித்த அசுரத்தனமான சிக்ஸர் ஒன்று கால் சர்வதேச மைதானத்திற்கு வெளியே சாலையில் சென்று விழுந்தது.

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் 27வது ஓவரின் போது இந்த சிறப்பான ஷாட்டை அவர் விளையாடினார். வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார வீசிய 133.6 கி.மீ வேகத்திலான பந்தை, கிரீஸை விட்டு வெளியேறி லாங்-ஆஃப் திசைக்கு மேல் பந்த் சிக்ஸராக பறக்கவிட்டார். பந்து மைதானத்திற்கு வெளியே இருந்த தெருவில் போய் விழுந்தது.

முன்னதாக, முதல் இன்னிங்ஸிலும் ரிஷப் பந்த் சிறப்பான துவக்கத்தைப் பெற்றார். ஆனால், அவரால் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. 62 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேஷர நுவன்தாவின் பந்துவீச்சில் பெரிய ஷாட் அடிக்க முயன்று சோனல் தினுஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஷர நுவன்தா வீழ்த்திய முதல் விக்கெட் இதுவாகும். தற்போது இந்திய அணி இலங்கைக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்க பந்தின் அதிரடியான ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியை 284 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்த இந்திய அணி, 178 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் 75 பந்துகளில் 44 ரன்கள் மற்றும் கேஎல் ராகுல் 47 பந்துகளில் 35 ரன்கள் என ஜோடி அணியை மீட்டெடுத்தது. மதிய உணவுக்கு சற்று முன்னதாக படிக்கல் ஆட்டமிழந்தார். 28வது ஓவரில் கேஷர நுவன்தா வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழக்க நேரிட்டது.

படிக்கல் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, நான்காவது நாள் மதிய உணவு இடைவேளைக்கு புறகு இந்திய அணி 36 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி தனது ஒட்டுமொத்த முன்னிலையை 329 ரன்களாக உயர்த்தியுள்ளது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.