UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
தகுதியும், விருப்பமும் உள்ள பட்டதாரிகள் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், நிறுவனச் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் அல்லது பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 11.09.2026 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் சிறப்புத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இத்தேர்விற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆகும். பட்டியலின, பாலங்குடியின,மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு இந்த அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஏனெனில், இந்தத் தேர்வின் பாடத்திட்டமும் , யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டமும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகின்றன. குறிப்பாக, இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியப் பொருளாதாரம், பொது நிர்வாகம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்ற பகுதிகள் பொதுவானதாக இருப்பதால், இத்தேர்வையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். ஏற்கனவே செய்து வரும் தயாரிப்பைக் கொண்டே வெற்றி பெற முடியும். எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் யூபிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 11.09.2026 ஆகும். கல்வித்தகுதி, வயது வரம்புத் தளர்வுகள் உள்ளிட்ட தேர்வு குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை www.upsc.gov.in/recruitment/advertisement என்ற இணையதளப் பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி