வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும் போது எந்த நோக்கத்திற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
மொத்த மதிப்பு குறைப்பு
நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத் துறைக்கு மட்டும் வெறும் ரூ.14,696.70 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கவே முடியாது.
மிகப்பெரிய ஏமாற்றம்
தார்ப்பாய்கள்
பயறு வகைகளின் சாகுபடியை 15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் லாபம் குறைவாகவே கிடைக்கும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத நிலையில், இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் & அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை.
அஞ்சலையம்மாள் விருது
நெல் உள்ளிட்ட 10 வகையான பயிர்களில் அதிக விளைச்சல் ஈட்டும் 3 உழவர்கள் வீதம் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.