Vishwanath and Sons X Review: சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ட்விட்டர் விமர்சனம் இதோ.. படம் எப்படி?
சென்னை: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், சுனில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் அதிகாலையிலேயே படம் வெளியான நிலையில், ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யா இந்த ஆண்டு கருப்பு படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிரூபித்துக் காட்டினார். அந்த படத்தைத் தொடர்ந்து டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஆக்ஷன் எல்லாம் வேண்டாம் நல்ல ஃபேமிலி டிராமாவாக பண்ணலாம் என முடிவெடுத்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதையை தேர்வு செய்து நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்கள் என்றாலே கத்தியும் ரத்தமுமாகவே படங்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படியான ஃபீல் குட் படங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தியேட்டர்களுக்கு வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இதுவரை படம் பார்த்தவர்கள் படத்தை பற்றி என்ன சொல்லியுள்ளனர் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
முதல் பாதி சூப்பர்: அதிகாலையிலேயே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பார்த்த கிறிஸ்டோபர் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், முதல் பாதி சூப்பர் என பதிவிட்டுள்ளார். ரொம்பவே மெதுவாகவும் கிரிஞ்சாகவும் படம் ஆரம்பித்தாலும் அதன் பிறகு படம் பிக்கப் ஆகி இடைவேளை வரை ரொம்பவே சிறப்பாக சென்றது என பதிவிட்டுள்ளார். அழகான சூர்யா - மமிதா - ராதிகா காம்போ செம காமெடியாக உள்ளது. ஹாஸ்பிடல் சீக்வென்ஸ், ட்ரிப் காமெடி, ஹோட்டல் ஃபைட் தான் முதல் பாதியில் செம ஹைலைட் என்றும் இதே போல 2வது பாதியும் இருந்தால் படம் பிளாக்பஸ்டர் தான் என பதிவிட்டுள்ளார்.
தி ஒன் டைட்டில் கார்டு: நடிப்பின் நாயகன் சூர்யா பட்டத்தில் இருந்து தி ஒன் சூர்யாவாக உருவெடுத்துள்ளார் சூர்யா. நடிகர் விஜய் அரசியலுக்குச் சென்று முதலமைச்சர் ஆன நிலையில், அந்த இடத்தை சூர்யா கண்டிப்பாக நிரப்புவார் என விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட விழாவில் தயாரிப்பாளரே சொன்ன நிலையில், தி ஒன் டைட்டில் கார்டுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இன்று வெளியானது.
செகண்ட் ஹாஃப் எப்படி?: பிரபல டோலிவுட் விமர்சகர் வெங்கி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் முதல் பாதி சூப்பராகவே இருந்தது என்றும் ஆனால் 2வது பாதி ரொம்பவே வீக் என தனது விமர்சனத்தை தடாலடியாக கொடுத்துள்ளார். படம் ஸ்லோவாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் மூலக் கதையை நோக்கி படம் நகர்கிறது. ரொம்பவே ஃபிரெஷ்ஷான காட்சிகளுடன் முதல் பாதி ரசிக்க வைக்கிறது. சூர்யா, மமிதா, ராதிகாவின் நடிப்பு படத்தை காப்பாற்றுகிறது. வெங்கி அட்லூரியின் வசனங்கள் சிறப்பாக உள்ளது. 2வது பாதியில் அவரது திரைக்கதை இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் போல பிளாக்பஸ்டர்: முதல் பாதியை போலவே 2வது பாதியும் ரொம்பவே சூப்பராக உள்ளது. தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தை போலவே இந்த படமும் ஃபீல் குட் படம் தான். சூர்யாவுக்கு கண்டிப்பாக அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.