📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 25, 2026 05:03 PM

வலிகளை கடந்து குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற மன்பிரீத் கவுர்.. ஆசிய விளையாட்டில் 21

வலிகளை கடந்து குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற மன்பிரீத் கவுர்.. ஆசிய விளையாட்டில் 21

வலிகளை கடந்து குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற மன்பிரீத் கவுர்.. ஆசிய விளையாட்டில் 21-வது பதக்கம்

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில், இந்தியாவுக்கு 21வது பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான குண்டு எறிதல் இறுதிப்போட்டியில், இந்தியாவின் மூத்த வீராங்கனை மன்பிரீத் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், 36 வயதான மன்பிரீத் கவுர் 17.17 மீட்டர் தூரத்திற்கு குண்டை எறிந்து 3-வது இடத்தைப் பிடித்தார். தனது முதல் முயற்சியில் 16.32 மீட்டர் தூரம் எறிந்த அவர், அடுத்தடுத்த சுற்றுகளில் தனது திறமையை சீராக உயர்த்தினார். போட்டியின் 4-வது சுற்றில் அவர் வீசிய 17.17 மீட்டர் தூரமே அவருக்கு வரலாற்று வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.

கடந்த 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டில் 5-வது இடத்தையும், 2026 காமன்வெல்த் போட்டியில் 17.49 மீட்டர் எறிந்து 4-வது இடத்தையும் பிடித்து நூலிழையில் பதக்கங்களைத் தவறவிட்டிருந்தார். தொடர் ஏமாற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி, தனது 36-வது வயதில் மன்பிரீத் கவுர் ஆசிய விளையாட்டுப் பதக்கத்தை வென்று இருப்பது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.