📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 31, 2026 08:30 AM

பாட்டிலுக்கு 10 ரூபாய் தரமறுத்து டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி: முதியவரின் அட்டகாச வீடியோ வைரல்

பாட்டிலுக்கு 10 ரூபாய் தரமறுத்து டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி: முதியவரின் அட்டகாச வீடியோ வைரல்

பாட்டிலுக்கு 10 ரூபாய் தரமறுத்து டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி: முதியவரின் அட்டகாச வீடியோ வைரல்

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் சற்குணம். இவர் பூலாவரி அருகே ஆத்துகாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். கடந்த 3 நாட்களாக டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையில், நேற்று சற்குணம் கடையை திறந்தார். இதனால் கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது உத்தமசோழபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (70) என்பவர், மதுபாட்டில் வாங்கியுள்ளார். பாட்டிலை திரும்ப பெறுவதற்கான 10 ரூபாய் ஸ்கேனர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

ஆனால் பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள 140 ரூபாய் மட்டும் தான் தருவேன், ஸ்டிக்கருக்கு நான் பணம் தர மாட்டேன் என கூறிய முதியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் விற்பனையாளர் சற்குணம், சீனிவாசனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சீனிவாசன் திடீரென செருப்பை கழற்றி சற்குணத்தை தாக்கினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n