📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 05:30 PM

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பெட்ரோல் ஒரு லிட்டர் 108.20 ரூபாய்க்கு விற்பனை

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பெட்ரோல் ஒரு லிட்டர் 108.20 ரூபாய்க்கு விற்பனை

சென்னை: தமிழகம் உட்பட நாடு முழுவதும், இன்றும் (மே 27) பெட்ரோல் விலை லிட்டருக்கு, 33 காசுகள்; டீசல் லிட்டருக்கு, 32 காசுகள் அதிகரித்தன.

நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன.மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 33 காசுகள்; டீசல் லிட்டருக்கு, 32 காசுகள் அதிகரித்தன.

அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.20க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த, 13 நாட்களில் மட்டும், 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும் தொடர்ந்து நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் விலைக்கு நிகராக சிஎன்ஜி விலையும் கிடுகிடு உயர்ந்துள்ளது; சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிலோ 95ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.