📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Australia Tamil May 21, 2026 09:37 AM

தேர்தல் ரிசல்ட் நாளில் தவெக தலைவர் விஜய் எடுத்த முடிவு.. ஆஸ்திரேலியா பயணம்.. என்ன காரணம்?

தேர்தல் ரிசல்ட் நாளில் தவெக தலைவர் விஜய் எடுத்த முடிவு.. ஆஸ்திரேலியா பயணம்.. என்ன காரணம்?

தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே தேர்தல் களம் களைகட்டியது. தற்போது, தேர்தல் பணிகள் அனைத்தும் ஒருவழியாக முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ரிலாக்ஸ் செய்வதற்காக சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் வரும் மே 04ந் தேதி ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிமுகம், சூறாவளி பிரச்சாரம் என தேர்தல் களம் அனல் பறக்க செயல்பட்டது. மேலும், தவெக போன்ற புதிய கட்சியின் வருகை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்தி இருந்து. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்குப்பதிவுமாலை 6 மணி வரையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சில இடங்களில் இரவு 9 மணி வரையிலும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.வாக்கு சதவீதத்தில் புதிய வரலாற்றுச் சாதனைமாநிலத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த முடிந்த இந்த வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 85.15% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச் சாவடிகளில் அமைதியான முறையில் நடந்து முடிந்த இந்த தேர்தலில், எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய தேவை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மே 04ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.சுற்றுலா செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள்சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, தேர்தல் பணிகள் அனைத்தும் ஒருவழியாக முடிவடைந்துள்ளதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ரிலாக்ஸ் செல்வதற்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லத் திட்டமிட்டு வருகின்றனர். இதை ஒரு வழக்கமாகவே அரசியல் கட்சி தலைவர்கள் வைத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, நடந்த முடிந்த தேர்தலில் வாக்கு செலுத்திய கையோடு, உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று கொடைக்கானல் சென்று இருக்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல், பல கட்சிகளின் பிரதான வேட்பாளர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.தேர்தல் தேதி அறிவிப்பு! _ மாறப்போகும் அரசியல் களம்! _ 4மணிக்கு வெளியாகும் தேர்தல் தேதி!தவெக தலைவர் விஜய்யின் ப்ளான்பொதுவாக, விஜய் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, ஏதாவது வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்து இருந்தார். இந்த நிலையில், அரசியலில் நுழைந்த பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எந்த இடங்களுக்கும் செல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும், தற்போது தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், அவரது திட்டம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.மே 04ந் தேதி வெளிநாடு செல்லும் தவெக விஜய்சட்டமன்றத் தேர்தல் 2026 இன் முடிவுகள், வரும் மே 04ந் தேதி வெளியாகவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் அதே நாள் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடு செல்வதற்காக அவர் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், தேர்தலில் தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால், விஜய் இந்த திட்டத்தை கைவிட வாய்ப்புள்ளது.அதேசமயம் தவெக தோல்வி அடைந்தால் உடனே ஆஸ்திரேலியா சென்று விடுவார் என்று சொல்லப்படுகிறது. எனவே, விஜய்யின் இந்த ஆஸ்திரேலியா பயணம் தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் அமையப் போகிறது. மே 04 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.