📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 17, 2026 09:03 AM

135 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு.. கைது செய்யப்பட்ட 4 பேரிடம் விடிய விடிய விசாரணை!

நாகை: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த தவெக நிர்வாகி பதுக்கி வைத்திருந்த ரூ.135 கோடி மதிப்பிலான உயர் ரக போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தப்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தவெக நிர்வாகி பூபாலன், அவரது கூட்டாளிகள் சுகன், சதீஷ், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் வழக்கில் நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் தவெக நிர்வாகியிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் தவெக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். சர்வதேச போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தஞ்சையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.