📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 07:00 PM

நாடு முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

நாடு முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்டது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 108.01க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 99.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் ஹர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.