📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 31, 2026 11:33 AM

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு; இன்றைய (ஜூலை 31) நிலவரம்!

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு; இன்றைய (ஜூலை 31) நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு லடசத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 13,255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 29) ஆபரண தங்கம் கிராம், 13,155 ரூபாய்க்கும், சவரன், 1,05,240 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 235 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (ஜூலை 30), தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் உயர்ந்து, 13,230 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 600 ரூபாய் அதிகரித்து, 1,05,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஜூலை 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு லடசத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 13,255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிறப்பு வீடியோ!

இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்