📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports November 28, 2026 03:02 PM

2027 ஐபிஎல்: மும்பை அணிக்கு ரோகித் சர்மா தலைமை ஏற்பார்

2027 ஐபிஎல்: மும்பை அணிக்கு ரோகித் சர்மா தலைமை ஏற்பார்

புதுடெல்லி: 2027 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பருவத்தில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தலைமை ஏற்பார் என்று அந்த அணி நிர்வாகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தது.

ஐந்து முறை ‘சாம்பியன்’ பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அதன் முன்னாள் அணித் தலைவர் ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்ததைத் தொடர்ந்து ரோகித்துக்கு அணித் தலைவர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டு உள்ளது.

சர்மா கடைசியாக 2023ஆம் ஆண்டு மும்பை அணிக்குத் தலைமை ஏற்றிருந்தார்.

அப்போது ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு முன்னேறிய அந்த அணி, தகுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

இந்த மாதத் தொடக்கத்தில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக பாண்டியா பரிமாற்றம் செய்யப்பட்டார். அதன் காரணமாக ரோகித் சர்மா அழைக்கப்பட்டுள்ளார்.

“20வது பருவத்துக்கும் வரவிருக்கும் சவால்களுக்கும் நமது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஏராளமான தருணங்களை வழங்குவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

“நமது பாணியிலான கிரிக்கெட்டை விளையாடுவது, ஒன்றாகப் போட்டியிடுவது, விளையாட்டை ரசிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்,” என்று சர்மா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.