📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 28, 2026 03:02 PM

ஜாலான் புசாரில் விபத்து; மருத்துவமனையில் ஒருவர்

ஜாலான் புசாரில் விபத்து; மருத்துவமனையில் ஒருவர்

ஜாலான் புசாரில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 26) குப்பை லாரி, போர்ஷ கார், மற்றொரு கார் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, 68 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

பென்கூலன் ஸ்திரீட்டை நோக்கிச் செல்லும் ஜாலான் புசாரில் விபத்து நடந்ததாகத் தங்களுக்கு அன்றைய தினம் இரவு 7.55 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் ஊடகங்களுக்கு அளித்த பதில்களில் தெரிவித்தன.

அந்த விபத்தில் ஒரு குப்பை லாரியும் இரண்டு கார்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். 66 வயதுப் பெண் கார் ஓட்டுநர் ஒருவர் தொடர்ந்து நடைபெற்றுவரும் விசாரணையில் உதவிவருகிறார்.

மற்றொரு காரின் ஓட்டுநரான 68 வயது ஆடவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மற்றொரு நபருக்கு ஏற்பட்ட சிறிய காயங்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட விபத்திற்குப் பிந்தைய புகைப்படங்களில், போர்ஷ காரின் முன்பகுதி, ‘கோரா என்வைரன்மென்ட்’ (Cora Environment) எனும் கழிவு மேலாண்மை நிறுவனத்திற்குச் சொந்தமான குப்பை லாரியின் பின்பகுதியில் சிக்கியிருப்பது தெரிகிறது.

அதோடு, போர்ஷ காரின் முன்வலப்பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் அதன் இடது பக்கவாட்டுப் பகுதியும் நசுங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கூடுதல் தகவல்களுக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ‘கோரா என்வைரன்மெண்ட்’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளது.