📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology May 21, 2026 06:46 AM

2.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மோசடி பண பரிவார்த்தனைகள் தடுப்பு; ஆப்பிளd நிறுவனம் அறிவிப்பு

2.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மோசடி பண பரிவார்த்தனைகள் தடுப்பு; ஆப்பிளd நிறுவனம் அறிவிப்பு

ஹைதராபாத்: சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மோசடி பண பரிவார்த்தனையை 'ஆப் ஸ்டோர்' தடுத்து நிறுத்தியுள்ளதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

ஆப்பிள்-இன் 'ஆப் ஸ்டோர்', ஐஃபோன், ஐபேட், மேக் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட செயலிகளுக்கான ஓர் உலகளாவிய தளமாகும். இந்த தளம் வாரந்தோறும் 850 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையிலேயே 2025 ஆம் ஆண்டில் மட்டும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' வாயிலாக 2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மோசடி பண பரிவார்த்தனை தடுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை மொத்தமாக 11.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பண மோசடியை தடுத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.

இதுதவிர, பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயலிகள் ஆப்பிள் ஸ்டோரில் பரவுவதற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அந்த தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டில் மட்டும் 2 மில்லியனுக்கும் அதிகமான செயலிகள் தீங்கு விளைவிக்கக் கூடியவையாகக் கண்டறியப்பட்டு, அவற்றின் விண்ணப்பங்களை நிராகரித்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் சமூக வலைதளத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'டிஜிட்டல் உலகம் விரிவடைவதற்கு ஏற்ப தீய சக்திகளும் தங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நுகர்வோரை எப்படி எல்லாம் கவர்ந்து, அவர்களை வலையில் வீழ்த்தலாம் என்பதற்கான தந்திரங்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் சதிகளை மேம்பட்ட இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மனித மதிப்பாய்வைக் கொண்டு முறியறிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்துள்ளது.

ஆப் ஸ்டோரில் தவறான தகவல்களுடன், போலி மதிப்பீடுகள் மற்றும் தரவரிசைகளை மாற்ற முயன்ற 1.1 பில்லியனுக்கும் அதிகமான போலி பயனர்களின் கணக்கு உருவாக்கங்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கள் 2025 இல் மட்டும் நீக்கிய கணக்குகளின் எண்ணிக்கை இதுவாகும். இதுதவிர, மோசடியில் தொடர்புடைய 40.4 மில்லியன் கணக்குகளையும் அந்த குழு முடக்கியுள்ளது.

கூடுதல் நடவடிக்கையாக ஆப் ஸ்டோரின் விதிகளை மீறி மோசடி செயலில் ஈடுபட முயன்ற 1 லட்சத்து 93 ஆயிரம் டெவலப்பர்களின் கணக்குகளையும் ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து, 1 லட்சத்து 38 ஆயிரம் டெவலப்பர்களின் பதவிகளையும் ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளது.

இத்துடன், மோசடி சார்ந்த செயலிகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக 28 ஆயிரம் செயலிகளை பைரட் ஸ்டோர்களில் இருந்தும் ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது. இதேபோல், அங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட 2.9 மில்லியன் முயற்சிகளையும் அது தடுத்துள்ளது.

மேலும், பயனர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் செயலிகளின் தரத்தை போலியாக உயர்த்த முயன்ற சுமார் 195 மில்லியன் போலி ரேட்டிங் மற்றும் ரிவியூக்களும் பொதுமக்களின் பார்வைக்கு வராத வண்ணம் தடுக்கப்பட்டு உள்ளன.

இதேபோல், திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செயலிகளை வாங்குவதைத் தடுக்கும் விதமாகவும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 5.4 மில்லியனுக்கும் அதிகமான திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செயலிகள் வாங்குவது தடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பண மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 2 மில்லியன் பயனர்களின் கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன. இதுதவிர, குழந்தைகளின் பிரிவில் செயலிகளின் விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.' என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.