📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 25, 2026 04:30 PM

7

7

தோக்கியோ: 7-இலெவன் (7-Eleven) கடைகளை உலகின் மாபெரும் அக்கம் பக்கம் கடைச் சங்கிலியாக உருவாக்கிய தோ‌ஷிஃபூமி சுசூகி காலமானார். அவருக்கு வயது 93.

இதயக் கோளாறு காரணமாக திரு சுசூகி மே 18ஆம் தேதி காலமானதாக 7-இலெவன் நிறுவனம் திங்கட்கிழமை (மே 25) அறிக்கை வெளியிட்டது.

1974ஆம் ஆண்டு ஜப்பானில் முதல் 24 மணிநேர 7-இலெவன் கடையைத் திரு சுசூகி திறந்தார். அந்தக் காலக் கட்டத்தில் மாம் அண்ட் பாப் (mom-and-pop) கடைகள் ஜப்பானில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இந்நிலையில், 1990ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனமான 7-இலெவன், தான் நொடித்துப் போனதாக அறிவித்தது. இதையடுத்து திரு சுசூகி அந்த நிறுவனத்தை வாங்கினார்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 7-இலெவன் கடைகளை ஜப்பான் முழுவதும் திரு சுசூகி திறந்தார். பின்னர் மற்ற நாடுகளுக்கும் கிளை பரப்பினார்.

2016ஆம் ஆண்டு 7-இலெவன் தலைமை நிறுவனத்தின் தலைவர், தலைமை நிர்வாகிப் பொறுப்பிலிருந்து திரு சுசூகி விலகியபோது, உலக அளவில் 16 நாடுகளில் 55,000க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்திருந்தார்.

தற்போது உலக அளவில் 85,000க்கும் அதிகமான 7-இலெவன் கடைகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட கால்பங்கு கடைகள் ஜப்பானில் உள்ளன.