75 சதவிகிதம் உயர்ந்த அர்விந்த் பங்கு விலை பரிந்துரைக்கும் மோதிலால் ஓஸ்வால்
ஜவுளித் துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதால், நடப்பு 2026ம் ஆண்டில், ஜூன் 24ம் தேதி வரை, 'அர்விந்த்' நிறுவன பங்கு விலை 75 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால், இப்பங்கை வாங்குமாறு பரிந்துரை செய்துள்ள 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனம், இதன் இலக்கு விலையாக 670 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 6.62 சதவீதம் உயர்ந்து 556 ரூபாயில் நிறைவடைந்தது.
பரிந்துரைக்கான காரணங்கள்
* ஜவுளி சந்தையின் மதிப்பை 33.07 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த அரசு இலக்கு
* சீனாவிலிருந்து சர்வதேச பிராண்டுகள் வெளியேறுவதால், உலக ஆடை வர்த்தகத்தில் 4 - 5 சதவீதம் மட்டுமே பங்களிக்கும் இந்திய நிறுவனங்களுக்கு, புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்
* வலுவான ஏற்றுமதி வளர்ச்சியும், நிலையான உள்நாட்டு தேவையும் சாதகமாக உள்ளன
* அர்விந்த் நிறுவனம், துணி சார்ந்த வணிகத்தில் இருந்து ஆடை சார்ந்த வணிகத்துக்கு மாறி வருகிறது
* இந்நிறுவனத்தின் 'அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ்' தொழிலில் நல்ல லாப விகிதமும், வளர்ச்சி வாய்ப்புகளும் உள்ளன
* 2027 - 28 நிதியாண்டுக்குள் நிறுவனத்தின் வருவாய் 15%; லாபம் 29% கூட்டு
வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்ப்பு.