ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தங்கங்கள்: நீரு தண்டா முதல் வித்யா ராம்ராஜ் வரை
தேசிய கொடியை ஏந்திச் செல்லும் நீரு தண்டா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களைக் கைப்பற்றினர். இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் விவரம் வருமாறு:
>> துப்பாக்கிச் சுடுதல்: இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர், விதர்ஸா வினோத் (மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி- வெள்ளி), இளவேனில் வாலறிவன் (மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் -வெள்ளி), ருத்ரான்க்ஷ் பாட்டீல், பார்த் மானே, ஹிமான்ஷு தில்லான், ஹிமான்ஷு தில்லான் (ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி- வெள்ளி), ஹிமான்ஷு தில்லான் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர்- வெள்ளி), ருத்ரான்க் ஷ் பாட்டீல் (ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்-வெண்கலம்), பரினாஸ் தலிவால், ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜீத் சிங் நருகா (மகளிர் ஸ்கீட் - அணிப் பிரிவு -வெண்கலம்), அனந்த்ஜீத் சிங் நருகா பாவ்தேக் சிங் கில், மைராஜ் அகமது கான் (ஆடவர் ஸ்கீட் அணிப் பிரிவு-வெண்கலம்), அனந்த்ஜீத் சிங் நருகா, பரினாஸ் தலிவால் (கலப்பு ஸ்கீட் அணிப் பிரிவு-வெண்கலம்), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ரான்க் ஷ் பாட்டீல், நீரஜ் குமார்(ஆடவர் 50 மீட்டர் ரைபிள் அணிப் பிரிவு-வெள்ளி), கமல்ஜீத், சுருச்சி சிங் (கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி- தங்கம்), இஷா சிங் (மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் -வெள்ளி), நீரு தண்டா, மணிஷா கீர், ஆஷிமா அஹ்லாவத் (மகளிர் டிராப் அணிப்பிரிவு-வெள்ளி), நீருதண்டா (மகளிர் டிராப் பிரிவு-தங்கம்), கைனன்செனாய், நீரு தண்டா (கலப்பு டிராப்-தங்கம்)
>> கலப்பு தற்காப்புக் கலை: சுச்சிகா தரியால்(மகளிர் 60 கிலோ- வெண்கலம்)
>> கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி (தங்கம்), இந்திய ஆடவர் அணி - தங்கம்.
>> சாப்ட் டென்னிஸ்: ஜெய் மீனா (ஆடவர் -ஒற்றையர்-வெண்கலம்).
>> பளுதூக்குதல் : மீராபாய் சானு(மகளிர் 49 கிலோ-வெள்ளி)
>> பாட்மிண்டன்: இந்திய அணி (ஆடவர் அணி-வெண்கலம்)
>> படகோட்டுதல்: சத்னம் சிங், சல்மான் கான் (ஆடவர் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவு-வெண்கலம்)
>> வுஷு: ரோஷிபினா தேவி (மகளிர் 60 கிலோ சண்டா-வெள்ளி)
>> தடகளம்: சீமா குமாரி(மகளிர் 10 ஆயிரம் மீட்டர்-வெண்கலம்), மனு டி.எஸ், பூவம்மா, விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ் (கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்-வெள்ளி), விதர்சா வினோத், ஆஷி சவுக்சி, திலோத்தமா சென் (மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பி அணி -வெள்ளி), மன்பிரீத் கவுர் (மகளிர் குண்டு எறிதல்-வெண்கலம், குல்வீர் சிங் (ஆடவர் 10 ஆயிரம் மீட்டர்-வெள்ளி), பரணிகா இளங்கோவன் (மகளிர் போல் வால்ட்-வெண்கலம்), சாவன் பெர்வால் (ஆடவர் மாரத்தான்-வெள்ளி), தஜிந்தர் சிங் தூர் (ஆடவர் குண்டு எறிதல் -வெள்ளி), பிராச்சி சவுத்ரி (மகளிர் 400 மீட்டர் -வெண்கலம்), ஹரிதா பத்ரா (மகளிர் 200 மீட்டர் -வெண்கலம்), அன்சி சோஜன்(மகளிர் நீளம் தாண்டுதல் -வெள்ளி), தேஜஸ்வின் சங்கர் (ஆடவர் டெகத்லான்-வெண்கலம்), பாருல் சவுத்ரி (மகளிர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்-வெண்கலம்), சர்வேஷ் குஷாரே (ஆடவர் உயரம் தாண்டுதல்-வெள்ளி), வித்யா ராம்ராஜ் (மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டம்-வெண்கலம்), குல்வீர் சிங் (ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டம்-வெள்ளி), பாருல் சவுத்ரி (மகளிர் 5 ஆயிரம் மீட்டர்-வெண்கலம்), முரளி சங்கர் (ஆடவர் நீளம் தாண்டுதல்-வெள்ளி), யஷ் வீர் சிங் (ஆடவர் ஈட்டி எறிதல்-வெள்ளி), ரோஹித் யாதவ் (ஆடவர் ஈட்டி எறிதல்-வெண்கலம்), குரிந்தர்வீர் சிங், ஸ்னேகா, அனிமேஷ் குஜுர், ஹரிதா பத்ரா (கலப்பு 4x100 தொடர் ஓட்டம்-வெண்கலம்), குல்வீர் சிங் (ஆடவர் 5 ஆயிரம் மீட்டர்-வெண்கலம்), பூஜா சிங் ( மகளிர் உயரம் தாண்டுதல்-வெண்கலம்), கிரண் பஹல், பூவம்மா, பிராச்சி சவுத்ரி, வித்யா ராம்ராஜ் (மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் - தங்கம்),தர்ம்வீர் சவுத்ரி, மனு, ஜெய்குமார், விஷால் (ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்-வெண்கலம்)
>> கபடி: இந்திய மகளிர் அணி(தங்கம்), இந்திய ஆடவர் அணி(தங்கம்).
>> குராஷ்: பிங்கி பல்ஹரா(மகளிர் 78 கிலோ - வெண்கலம்)
>> டேபிள் டென்னிஸ்: தியா சிதாலே, மானுஷ் ஷா (கலப்பு இரட்டையர்-வெண்கலம்)
>> ஸ்குவாஷ்: ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் (கலப்பு இரட்டையர் -வெண்கலம்), அபய் சிங்(ஆடவர் ஒற்றையர்-வெள்ளி), அனஹத் சிங் (மகளிர் ஒற்றையர் - வெள்ளி), அனஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கன்னா, ஷமீனா ரியாஸ் (மகளிர் அணிப்பிரிவு -வெண்கலம்), அபய் சிங், வீர் சோட்ரானி, வேலவன் செந்தில்குமார், சுராஜ் குமார் சந்த் (ஆடவர் அணிப்பிரிவு-வெண்கலம்).
>> குத்துச்சண்டை: நரேந்தர் பெர்வால் (ஆடவர்-+90கிலோ-வெண்கலம்), கபில் பொகாரியா (ஆடவர் 90 கிலோ -வெண்கலம்), லவ்லினா போர்கோஹெயின் (மகளிர் 75 கிலோ -தங்கம்), பர்வீன் ஹூடா (மகளிர் 65 கிலோ - தங்கம்), அங்குஷ் பங்கால் (ஆடவர் 80 கிலோ -தங்கம்), பிரியா கங்காஸ் (மகளிர் 60 கிலோ-வெண்கலம்)
>> வில்வித்தை: ஜோதி சுரேகா வென்னம், பிரித்திகா பிரதீப், சிகிதா தனிபர்த்தி(மகளிர் காம்பவுண்ட் அணி் - தங்கம்), சிகிதா தனிபர்த்தி, சஹில் ஜாதவ் (கலப்பு காம்பவுண்ட் அணி-தங்கம்), சஹில் ஜாதவ், கணேஷ் மணிரத்னம் திருமுரு, குஷால் தலால் (ஆடவர் காம்பவுண்ட் அணி-தங்கம்), கணேஷ் மணிரத்னம் திருமுரு(ஆடவர் காம்பவுண்ட் தனிநபர்-வெண்கலம்), தீரஜ் பொம்மதேவரா, நீரஜ் சவுகான், யஷ்தீப் போகே (ஆடவர் அணிப் பிரிவு வெள்ளி), அங்கிதா பகத், கும்கும் மோஹோத், கீர்த்தி சர்மா (மகளிர் அணி ரீகர்வ் பிரிவு - தங்கம்), கும்கும் மோஹோத், தீரஜ் பொம்மதேவரா (கலப்பு அணி ரீகர்வ்-வெள்ளி), கும்கும் மோஹோத்(மகளிர் தனிநபர் ரீகர்வ்-தங்கம்), நீரஜ் சவுகான் (ஆடவர் தனிநபர் ரீகர்வ்-வெண்கலம்),
>> மல்யுத்தம்: சுனில் குமார் (ஆடவர் கிரெகோ-ரோமன் 87 கிலோ- வெண்கலம்), நிதேஷ் குமார் (கிரெகோ ரோமன் 97 கிலோ-வெள்ளி), சுஜீத் கல்கல் (ஆடவர் 65 கிலோ-தங்கம்), அமன் ஷெராவத் (ஆடவர் 57 கிலோ -தங்கம்), தீபக் பூனியா (ஆடவர் 97 கிலோ -வெண்கலம்), அன்திம் பங்கால் (மகளிர் 53 கிலோ-வெள்ளி)
>> செயிலிங்: பிரின்ஸ் குரிசிங்கால் நோபிள், மனு பிரான்சிஸ்(ஆடவர் ஸ்கிப் பிரிவு-வெள்ளி), ஹர்ஷிதா தோமர், ஷீத்தல் வர்மா (மகளிர் ஸ்கிப் பிரிவு-வெண்கலம்), நேத்ரா குமணன் (மகளிர் டிங்கி பிரிவு-வெண்கலம்)
>> செபக்தக்ரா: இந்திய அணி(ஆடவர் குவாட்ரன்ட் பிரிவு-வெண்கலம்)
>> ஹாக்கி: இந்திய மகளிர் அணி (தங்கம்), இந்திய ஆடவர் அணி (தங்கம்).
>> கோல்ஃப்: பிரணவி அர்ஸ் (மகளிர் தனிநபர்-தங்கம்), பிரணவி அர்ஸ், ஆதித்தி அசோக், தீக்சா தாகர் (மகளிர் அணிப்பிரிவு -வெள்ளி).