📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 06, 2026 12:02 AM

எரிவாயு கலன் விலை உயர்வு: ராகுல், ஸ்டாலின் கண்டனம்

எரிவாயு கலன் விலை உயர்வு: ராகுல், ஸ்டாலின் கண்டனம்

புதுடெல்லி: நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்​களில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயுக் கலன் விலை 81 விழுக்காடு உயர்ந்​திருப்பதற்கு மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்​தலுக்​குப் பிறகு விலை​வாசி உயரும் என்று ஏற்​கெனவே தாம் கூறியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது வணிக சமையல் எரிவாயு விலை ஒரு கலனுக்கு ரூ.993 உயர்த்​தப்​பட்டுள்​ளது. ஒரே நாளில் கணிச​மாக விலை உயர்த்​தப்​பட்டு இருக்​கிறது. இது​தான் தேர்​தல் கட்​ட​ணம்.

“கடந்த பிப்​ர​வரி மாதம் முதல் ஏப்​ரல் வரை 3 மாதங்​களில் மட்​டும் வணிக எல்​பிஜி விலை ரூ.1,380 விலை உயர்த்​தப்​பட்டு உள்​ளது. அதாவது 81 விழுக்காடு வரை விலை உயர்ந்​திருக்​கிறது,” என்று திரு ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த விலை உயர்​வால் தேநீர்க்கடை, உணவகங்கள், இனிப்புக் கடைகள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும் என்றும் பொது​மக்​களும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்​ட​மாக வீடுகளுக்கான சமையல் எரிவாயுக் கலன், பெட்​ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் உயர்த்​தப்​படும் என ராகுல் காந்​தி கூறியுள்ளார்.

ஸ்டாலின் கண்டனம்

இதற்கிடையே, எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை இந்திய அரசு உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், முன்பே கணித்தது போல், தேர்தல் முடிந்தவுடன் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.