📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 01:01 AM

ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

நமது நிருபர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார்.

புதுச்சேரி போலீஸ் துறைக்கு ஜனாதிபதி வண்ண விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதினை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரி வருகை தருகிறார். டில்லியில் இருந்து சென்னை வரும் அவர், அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் மாலை 4:55 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக வந்து, புதுச்சேரி கடற்கரையையொட்டி உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். பின் ஆகஸ்ட் 9ம் தேதி காலை 8:10 மணிக்கு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும் விழாவில், போலீசாருக்கு ஜனாதிபதியின் வண்ண விருதை வழங்குகிறார்.

விழாவிற்கு பின், 10:50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்று ரமண ஆசிரமம், மற்றும் கோவிலில் தரிசனம் செய்கிறார். அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம், சென்னை சென்று, அங்கிருந்து, விமானம் மூலம் டில்லி செல்கிறார்.