📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 28, 2026 02:32 AM

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் சட்டம் செல்லுபடியாகும் : சுப்ரீம் கோர்ட்டு

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் சட்டம் செல்லுபடியாகும் : சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி,

பணம் வைத்து விளையாடப்படும் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்தது.

இதில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகளின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தனர்.

பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவை வணிகத்துக்கு அப்பாற்பட்ட விஷ யங்களாகக் கருதப்படுவதால், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்கு எந்தவொரு அடிப்படை உரிமையையும் கோர முடியாது என்று நீதிப திகள் தங்கள் உத்தரவில் கூறினர்.இதைப்போல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி.யும் செல்லுபடியாகும் என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.