Business
August 28, 2026 02:04 PM
ஆபரணத் தங்கத்தின் விலை 2 நாளில் ரூ.2,880 குறைவு
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.600 குறைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 2 தினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,880 சரிந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து, தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை பெரும்பாலும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்து ஏறி, இறங்கி விற்பனையாகி வருகிறது.
ஆனால், தங்கம் விலை நேற்று (ஆக.,27) காலையில் ரூ.560, மாலையில் ரூ.1,720 என ஒரே நாளில் ரூ.1,280 குறைந்து ஆபரணப் பிரியர்களை குஷியாக்கியது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை ரூ.600 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200க்கும், கிராமுக்கு ரூ.75 சரிந்து ரூ. 14,650க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை
தொடர்புடைய செய்திகள்
Business