ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை சொத்து வரி உயர்வை நிரந்தரமாக கைவிடாவிட்டால் போராட்டம்
ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை சொத்து வரி உயர்வை நிரந்தரமாக கைவிடாவிட்டால் போராட்டம்
சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: அமைச்சர் நிர்மல் குமாருக்கு வாயில் உண்மையே வராது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவில் இருந்த அவருக்கு மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. அவர் போகாத கட்சி இல்லை. புதுசாக தனுஷ் கட்சி ஆரம்பிக்க போகிறார், அண்ணாமலை கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள். இப்படி புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும், உடனே போய் உறுப்பினர் அட்டை வாங்கி வைத்துக்கொள்வது சிலருக்கு பாரம்பரியமான பழக்கம்.
அதில் முதன்மையானவர்தான் நிர்மல் குமார். சென்னையில் சொத்து வரி 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பெரிய கொதிப்பு ஏற்பட்ட பிறகு, தற்போது தற்காலிகமாக அதை நிறுத்தி வைப்பதாக சொல்கிறார்கள். இதை நிரந்தரமாக கைவிடாவிட்டால், திமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.