📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 29, 2026 08:04 AM

 'நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...' பாடிய அமைச்சரால் திமுக 'உர்ர்ர்'

 'நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...' பாடிய அமைச்சரால் திமுக 'உர்ர்ர்'

சென்னை: சட்டசபையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், நேற்று தன் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர், ''எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், சபாநாயகர் பிரபாகர் என்பது எங்களுக்கு தெரியும். எம்.ஜி.ஆரின் பாடலை பாடிக்கொள்கிறேன். இது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கும் பிடிக்கும்,'' என்றார்.

அதைத் தொடர்ந்து, 'நான் படித்தேன் காஞ்சி யிலே நேற்று...' என்ற பாடலை பாடி, ''அப்போதே 'ரீல்ஸ்' குறித்து, எம்.ஜி.ஆர்., சொல்லிவிட்டு போய்விட்டார்,'' என்று கூறினார். இதற்கு தி.மு.க.,வினர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் செங்கோட்டை யன்: எம்.ஜி.ஆர்., பாடலைத்தான் அமைச்சர் பாடினார். வேறெந்த அர்த்தத்துடனும் பாடவில்லை. அதை குற்றமாக எடுத்து கொள்ளக்கூடாது.

அமைச்சர் சம்பத்குமார்: எம்.ஜி.ஆர்., பாடலில் குறை இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?

தி.மு.க., - கே.என்.நேரு: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், அமைச்சர் பாடிய எம்.ஜி.ஆர்., பாடலுக்கும் என்ன சம்பந்தம்?

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: அமைச்சர் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார். நேற்றே சொல்லி இருக்க வேண்டிய பதில். நேற்று ஆரம்பிக்க வேண்டியது, இன்றைக்குதான் ஆரம்பித்து இருக்கார். பாட்டு பாட தொடங்கி விட்டார்.

இதில் சாட்சிக்கு, என்னை வேறு கூப்பிட்டு இருக்கார். இதற்கு நாங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சம்பத்குமார் பேசியதாவது: தமிழகத்தில் எத்தனையோ எண்கள் இருக்கலாம். ஆனால், ஆபத்து என்று வரும்போது, சாமானிய மக்கள் முதலில் நினைப்பது, 108 என்ற எண்தான். அந்த எண் ஒருவரின் உயிரை காப்பதற்கு ஆம்புலன்சை வரவழைக்கிறது. அதேபோல, தமிழக மக்கள் எப்போது துயரப்பட்டாலும், அவர்களுக்கு உதவுவதற்கு, த.வெ.க.,வின் 108 எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இருப்பர். ஆபத்து காலத்தில் காக்கும் ஆம்புலன்ஸ் போல, தமிழக மக்கள் அச்சம் போக்க, 108 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.