ஆதிதிராவிடர் மக்களுக்கு உதவுவதற்கு சமூக நீதி நல வாரியம் அமைக்க முடிவு: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு
சென்னை: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, வெளியிட்ட அறிவிப்பு விபரம்:
பள்ளி விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும், 1,400 ரூபாய் மாதாந்திர உணவுக் கட்டணம், 1,800 ரூபாயாகவும், கல்லுாரி விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் 1,500 ரூபாய், 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
சமூக நீதி ஆண்டு பராமரிப்பு தொகை 50,000 ரூபாய், 75,000 ரூபாயாகவும்; கல்லுாரி விடுதி பராமரிப்பு தொகை, 50,000 ரூபாய், ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்
150 சமூக நீதி விடுதிகள், 160 கோடி ரூபாயில் கட்டப்படும்
ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், 100 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்
பள்ளிகள் மற்றும் விடுதிகளில், சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு, 'அறிவொளி ஆசிரியர் விருது' மற்றும் காப்பாளர் விருது' வழங்கப்படும்
தொழில் முனைவோரை ஊக்குவிக்க, கோவையில் வணிக மையம்; சென்னை நந்தனத்தில், பழங்குடியினர் பண்பாட்டு மையம்; பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகளில், 'அம்பேத்கர் படிப்பகம்' ஏற்படுத்தப்படும்
நல உதவிகளை வழங்க, 'சமூக நீதி நல வாரியம்' அமைக்கப்படும்
'சமூக நீதி அறக்கட்டளை' உருவாக்கப்படும்
வீடற்ற துாய்மைப் பணியாளர்களுக்கு, சொந்த வீடு வழங்க, 'அகம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்
வீடற்ற பழங்குடியினருக்கு, 2,000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தர, 'உறையுள்' திட்டம் செயல்படுத்தப்படும்
வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு, 5,000 கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்
விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க, 'தீரம் - விளையாட்டு ஊக்கத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும்
சென்னை, ராமேஸ்வரம், துாத்துக்குடி, கோவளம் பகுதியில், 'சிகரம் - சிறப்பு விளையாட்டுத் திறன் மேம்பாட்டு திட்டம்' அறிமுகப்படுத்தப்படும்
மலைப்பகுதிகளில், 'பூம்பொழில் தங்கும் வசதிகள்' ஏற்படுத்தப்படும்
பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, மதிப்பு கூட்டுதல் செய்ய, 25 மதிப்பு கூட்டல் அலகுகள், 12.50 கோடி ரூபாயில் நிறுவப்படும். பழங்குடியின விளை பொருட்கள், 'முல்லை' என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும்
சிறுதானியங்களின் விதைகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்த, 'மரபு விதை பாதுகாப்பு திட்டம்' உருவாக்கப்படும்
'சிறப்பு கூட்டுறவு சங்கங்கள்' உருவாக்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் அறிவித்தார்.