அமைச்சர் கீர்த்தனாவின் திருத்த அறிக்கை: சட்டசபையில் ஒழுங்குப் பிரச்னை எழுப்பிய தி.மு.க..!
அமைச்சர் கீர்த்தனாவின் திருத்த அறிக்கை: சட்டசபையில் ஒழுங்குப் பிரச்னை எழுப்பிய தி.மு.க..!
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார். அதாவது பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பே திருத்த அறிக்கையை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
விதியின் கீழ் திருத்த அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீர்த்தனாவுக்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின், அதே விதியின்படி திருத்தக் குறிப்பை பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்க வேண்டும் என்றும், இதை ஒழுங்குப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், எதிர்காலங்களில் திருத்த அறிக்கையை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வர அமைச்சர்கள் முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார்.