Amul Milk Price Hike: நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு வாடிக்கையாளர்களுக்கு
Amul Milk Price Hike: நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்

Amul Milk Price Increase: அமுல் பால் நிறுவனம் ஒரு லிட்டர் பாலின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை, அதாவது மே 14-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல், அதன் பல்வேறு வகை பால்களின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. திருத்தப்பட்ட இந்த விலை உயர்வு, மே 14-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமுல் ஸ்டாண்டர்ட் மில்க், பஃபல்லோ மில்க், கோல்டு, ஸ்லிம் & டிரிம், டி-ஸ்பெஷல், தாஸா மற்றும் பசு பால் உள்ளிட்ட முக்கிய பால் பொருட்களுக்கு இந்த விலை திருத்தம் பொருந்தும்.

நாளை முதல் விலை உயர்வு

அமுல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை முதல் ஒரு லிட்டர் அமுல் பாலுக்கு நுகர்வோர் 2 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது, ஒரு லிட்டர் பாலின் விலையை அமுல் 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த முடிவை அமுல் பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு எடுத்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை, அதாவது மே 14-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இது சாமானிய மக்களின் பணப்பையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாலின் விலை எவ்வளவு.?

அமுல் பாலின் விலை 1 முதல் 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், 500 மிலி அமுல் தாஸா பால் பாக்கெட்டின் விலை 28 ரூபாயிலிருந்து 29 ரூபாயாக அதிகரிக்கும்.

சமீபத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக எரிவாயு விலைகளில் ஏற்பட்ட உயர்வு, சாமானிய மக்களின் நிதிநிலைக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பால் விலை உயர்வு பொதுமக்களுக்கு கணிசமான சிரமத்தை ஏற்படுத்தும். பால் ஒரு அத்தியாவசியப் பொருள் என்பதால், அதன் விலை உயர்ந்தாலும் மக்கள் அதை வாங்குவார்கள். எனவே, இந்த விலைகள் இல்லத்தரசிகளின் சமையலறைகளையும், வரவு செலவுத் திட்டங்களையும் நேரடியாக பாதிக்கும்.