📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 03:33 PM

அண்ணன் சீர் முதல் தாய் மாமன் திட்டம் வரை : தமிழ்நாட்டின் புது பட்ஜெட்டில் பெண்களுக்கான நன்மைகள்

அண்ணன் சீர் முதல் தாய் மாமன் திட்டம் வரை : தமிழ்நாட்டின் புது பட்ஜெட்டில் பெண்களுக்கான நன்மைகள்

தமிழ்நாடு அரசு தனது புதிய பட்ஜெட்டில் பெண்களின் நலனில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிகின்றது. பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் மற்றும் நன்மைகளை கொடுக்கும் அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அந்த திட்டங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. பெண்கள் நலன் ,குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருவது இந்த பட்ஜெட்டின் மூலம் தெரிகின்றது. அந்த வகையில் அண்ணன் சீர் திட்டம் மற்றும் தாய் மாமன் திட்டம் என இரண்டு முக்கிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ளதுஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் சுமையை குறைப்பதன் நோக்கமாகவே இந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு போன்ற சமயங்களில் தமிழ்நாடு அரசின் இந்த நிதி பெருமளவில் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைஅண்ணன் சீர் திட்டம்8 கிராம் தங்கம் *தகுதியுள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.*மேலும் திருமணத்திற்கான பட்டு புடவையும் பெண்களுக்கு வழங்கப்படும்*திருமண ஏற்பாடுகளின் போது ஏகப்பட்ட செலவுகள் இருக்கும். அதில் மிக முக்கியமான செலவுகளில் தங்கம் மற்றும் பட்டு புடவை செலவு அடங்கும். எனவே அரசின் இந்த திட்டத்தினால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சுமை பெருமளவில் குறையும்தாய் மாமன் திட்டம்*அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்*அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பதை ஊக்குவைக்க, அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை மக்களிடையே அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதுமேலும் சில திட்டங்கள் *அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படும்*அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் அரசு சார்பாக 1000 ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும்*இவ்வாறு தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல நல திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது