📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 01, 2026 11:04 PM

அண்ணன் பட வசூலை முந்தினால் சந்தோஷம் தான்.. சர்தார் 2 ஆடியோ லான்ச்சில் கார்த்தி பேச்சு!

அண்ணன் பட வசூலை முந்தினால் சந்தோஷம் தான்.. சர்தார் 2 ஆடியோ லான்ச்சில் கார்த்தி பேச்சு!

சென்னை: இந்த ஆண்டு சூர்யாவுக்கு சூப்பரான ஆண்டாக மாறியுள்ளது. கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் அதிக வசூலை ஈட்டி வெற்றிப் பெற்றுள்ளன. இந்நிலையில், அண்ணன் சூர்யா படங்களின் வசூலை கார்த்தியின் சர்தார் 2 முந்துமா என்கிற கேள்விக்கு கார்த்தி கொடுத்த பதில் தீயாக பரவி வருகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகிறது.

நேற்று அந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், கலந்துக் கொண்டு பேசிய ஹீரோ கார்த்தியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யா படங்களின் வசூலை முந்துமா?: சர்தார் 2 திரைப்படம் பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் 2வது பாகத்தை அதிக பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் 340 கோடி வசூலையும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 240 கோடி வசூலையும் ஈட்டிய நிலையில், அண்ணன் சூர்யா படங்களின் வசூலை சர்தார் 2 முந்துமா என்கிற கேள்வி எழுந்தது.

கார்த்தி சொன்ன பதில்: அண்ணன் சூர்யாவின் படங்களின் வசூலை சர்தார் 2 முந்தினால் தயாரிப்பாளருக்கு பெரிய சந்தோஷம் தான். இது ஒரு ஸ்பை த்ரில்லர் படம். பெரிய பட்ஜெட்டில் சூப்பராகவே எடுத்துள்ளனர். கண்டிப்பாக மக்களுக்கு இந்த படம் பிடிக்க வேண்டும். அது மட்டுமே எங்களுடைய முயற்சி என அழகாக பதில் அளித்துள்ளார் நடிகர் கார்த்தி.

கம்பேக் கொடுப்பாரா கார்த்தி?: பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடித்த ஜப்பான், மெய்யழகன், வா வாத்தியார் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், சர்தார் 2 திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சர்ப்ரைஸ் பிளாக்பஸ்டராக சர்தார் 2 மாறினால் தமிழ் சினிமாவுக்கு நல்லது தான். சூர்யா ஏற்கனவே இந்த ஆண்டு கோலிவுட்டை காப்பாற்றி வரும் நிலையில், கார்த்தி என்ன பண்ணப் போகிறார் என்பது விரைவில் தெரிந்து விடும்.