📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 01, 2026 11:04 PM

பிரிஞ்சிட்டதா சொன்னதெல்லாம் பொய்யா?.. ரவி மோகன் படத்தின் மியூசிக் டைரக்டர் கெனிஷாவா?

பிரிஞ்சிட்டதா சொன்னதெல்லாம் பொய்யா?.. ரவி மோகன் படத்தின் மியூசிக் டைரக்டர் கெனிஷாவா?

சென்னை: நடிகர் ரவி மோகன் முதன்முதலாக இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் 'அன் ஆர்டினரி மேன்' (An Ordinary Man) திரைப்படத்திற்கு, அவரது நெருங்கிய தோழியான கெனிஷாவே இசையமைக்கவுள்ளார் என்ற அதிரடி தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கெனிஷா இப்படத்திற்கு இசையமைக்க கமிட்டாகி இருப்பது வெளியாகி செய்தி, பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

கண்ணீர் பேட்டி: கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், குடும்ப பிரச்சினைகள் காரணமாக தன்னால் படத்தில் கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும், தோழி கெனிஷா தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் ரவி மோகன் பேட்டி ஒன்றில் கண்ணீர் விட்டுப் பேசியிருந்தார். ஆனால், தற்போது அந்த சிக்கல்களிலிருந்து மீண்டு வந்து,யோகி பாபு படத்தின் படப்பிடிப்பு, காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பழமையான கோவில் ஒன்றில் கோலாகலமாக தொடங்கியதாக கூறப்படுகிறது.

எல்லாம் சும்மாவா: யோகி பாபு லீட்ரோலில் நடிக்கும் 'அன் ஆர்டினரி மேன்' படத்திற்கு 'ஹைட்ரோ' என்பவர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவருக்கு பதிலாக கெனிஷாவே இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காட்டுத்தீ போல பரவும் இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள், பிரிஞ்சிட்டதா சொல்லி கண்ணீர் விட்டதெல்லாம் சும்மாவா? என்று கேட்டு வருகின்றனர்.

மாமியார் சொன்னது நிஜமா?: ரவி மோகனும் கெனிஷாவும் பிரிந்துவிட்டதாக சொல்லி அழுதெல்லாம் நாடகம், இருவரும்ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என ரவி மோகனின் முன்னாள் மாமியார் சுஜாதா கூறியிருந்தார். தற்போது கெனிஷா இசைபணியில் இணைந்திருப்பதாக வரும் செய்தியை பார்க்கும்போது முன்னாள் மாமியாரின் பேச்சு உண்மைதானோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், 'அன் ஆர்டினரி மேன்' படத்திற்கு கெனிஷா இசையமைக்க இருப்பதாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகிவில்லை.

கைவசம் உள்ள படம்: ஒருபுறம் 'அன் ஆர்டினரி மேன்' படத்தை இயக்கித் தயாரித்தாலும், கதாநாயகனாக ரவி மோகன் கையில், கராத்தே பாபு, ஜினி, ப்ரோ கோட், பென்ஸ், தனி ஒருவன் 2, GND ஷியாம் குமார் ஆகிய படங்கள் உள்ளன. இதில் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கராத்தே பாபு படம் அக்டோபர் 1ந் தேதி தியேட்டரில் வெளியாகி உள்ளது.