📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 13, 2026 11:01 PM

அந்த வார்த்தையை தெரியாம சொல்லிட்டேன்...... வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!

அந்த வார்த்தையை தெரியாம சொல்லிட்டேன்...... வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!

அந்த வார்த்தையை தெரியாம சொல்லிட்டேன்...... வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!

மாற்றுத்திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாகப் பயன்படுத்தியதாக அமைச்சர் அருண்ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், மாற்றுத்திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது, வழக்கத்தில் இருந்து தவிர்க்க வேண்டிய ஒரு வார்த்தையை தவறுதலாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அருண்ராஜ், “மாற்றுத்திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது வழக்கத்திலிருந்து நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாகப் பயன்படுத்தியமைக்காக மிகவும் வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மாற்றுத்திறனாளிகள் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம். அன்புச் சகோதர, சகோதரிகளுக்கு நமது மனப்பூர்வமான வருத்தத்தை இதன் மூலம் பதிவு செய்கிறோம்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தவறுதலாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்காக அமைச்சர் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சை தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் இதேபோன்ற சர்ச்சையில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிக்கி, பின்னர் மன்னிப்புக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.