📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 03, 2026 01:31 AM

 அப்பல்லோ மருத்துவமனைக்கு குடும்ப வணிகம் விருது

 அப்பல்லோ மருத்துவமனைக்கு குடும்ப வணிகம் விருது

சென்னை: 'தி எகனாமிக் டைம்ஸ்' குடும்ப வணிகம் விருது, நடப்பாண்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

நாட்டின் மிகப்பெரிய குடும்ப நிறுவனங்களில், வளர்ச்சி, சிறந்த நிர்வாகத் திறன், தலைமுறை கடந்த பயணம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு, 'தி எகனாமிக் டைம்ஸ்' நிறுவனம் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.

அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான, 'தி எகனாமிக் டைம்ஸ்' குடும்ப வணிகம் விருது, அப்பல்லோ மருத்துவமனை எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதை, அப்பல்லோ நிர்வாக துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து, அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறுகையில், ''ஒவ்வொரு இந்தியருக்கும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே, எனது கனவு.

''அந்த கனவை, எனது மகள்கள், தங்களுடையதாக்கி, கொண்டு செல்கின்றனர். இதற்காக, அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர்,'' என்றார்.