அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு!
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் பள்ளி காலாண்டு தேர்வுகள் 24ஆம் தேதி முடிவடைகின்றன. தேர்வுக்குப் பிறகு செப்டம்பர் 25ம் தேதி முதல் அக்.4 வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 2026-2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. காலாண்டுத் தேர்வு 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியான அறிக்கையில்; "அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறுவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பாடத்திற்கு தேர்வினை நடத்த வேண்டும்.
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். மேலும் செப்டம்பர் 16 - தமிழ், செப். 17 - ஆங்கிலம், செப். 18 - விருப்பப்பாடம், செப். 21 - கணக்கு, செப். 22 - உடற்கல்வி, செப். 23 - அறிவியல், செப்.24 - சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு;