📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 13, 2026 06:04 PM

அரிசி விலை உயர்வு.. ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை!

அரிசி விலை உயர்வு.. ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை!

அரிசி விலை உயர்வு.. ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை!

குறுவை நெல் சாகுபடிப் பரப்பு 17.5 லட்சம் ஹெக்டேரிலிருந்து 12.5 லட்சம் ஹெக்டேராக குறைந்ததால், அரிசி விலை அதிகரித்துள்ளது. சன்ன ரக அரிசி மற்றும் அதி-சன்ன ரக அரிசி விலைகள் கடந்த பத்து நாட்களில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் குறுவை நெல் சாகுபடிப் பரப்பு குறைந்துள்ளதே அரிசி விலை அதிகரித்துள்ளதற்கான காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களில் சன்ன ரக அரிசி விலை கிலோவுக்கு ரூபாய் வரையும், அதி-சன்ன ரக அரிசி விலை கிலோவுக்கு 9 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. 26 கிலோ அரிசிப் பையின் விலை நூற்று நாற்பது ரூபாய் முதல் இருநூற்று முப்பது ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதால் குறுவை நெல் சாகுபடி பரப்பு பதினேழரை லட்சம் ஹெக்டேரிலிருந்து பன்னிரண்டரை லட்சம் ஹெக்டேராகச் சுமார் ஐந்து லட்சம் ஹெக்டர் குறைந்துள்ளது.

மேலும், பிற மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்தது, உரக் கூலி மற்றும் எரிபொருள் செலவு அதிகரித்தது, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாயாக உயர்ந்தது ஆகியவையே இந்த அரிசி விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும். நெல் சாகுபடி 28 சதவீதம் குறைந்திருந்தாலும் தமிழ்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வரவிருக்கும் சம்பா சாகுபடி அறுவடைக்குப் பிறகு அரிசி விலை சீரடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 25 கிலோ வரையிலான அரிசி பைகள் மீதான ஐந்து சதவீத ஜி.எஸ்.டி வரியை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.